சூரிய சுழற்சிகளை கணிக்கும் முறைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

கடந்த நூற்றாண்டில் சூரியனின் சுழற்சி எவ்வாறு நிகழ்ந்தது என்பதை டிஜிட்டல் செய்யப்பட்ட பழங்கால படச்சுருள்கள், புகைப்படங்கள் வாயிலாக கண்டறியப்பட்ட தரவுகளின் மூலம் விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். எதிர்காலத்தில் சூரியனின் சுழற்சிகளையும், அதன் மாறுபாடுகளையும் கணிப்பது உள்ளிட்ட பணிகளில் இந்த மதிப்பீடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான ஆரியபட்டா ஆராய்ச்சி கணிப்பு அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த முனைவர் பட்டப்படிப்பு பயிலும் மாணவரான திரு பிபூதி குமார் ஜா தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு, ஜெர்மனியின் கோடிங்கேனில் உள்ள சூரிய மண்டலம் பற்றிய மேக்ஸ் பிளாங்க் கழகம், அமெரிக்காவின் பௌல்டர் நகரில் உள்ள தென்மேற்கு ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் பணியாளர்களுடன் இணைந்து டிஜிட்டல் செய்யப்பட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த படச்சுருள்கள், புகைப்படங்களின் வாயிலாக சூரியனின் சுழற்சியை ஆய்வு செய்துள்ளனர்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் மற்றொரு தன்னாட்சி நிறுவனமான இந்திய வானியற்பியல் நிறுவனத்தின், கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகத்தில் இந்த பழங்கால படச்சுருள்களும், புகைப்படங்களும் எடுக்கப்பட்டன.

Related Stories: