அல்சைமர் நோயைக் குணப்படுத்தும் தன்மையுடைய புதிய மூலக்கூறை விஞ்ஞானிகள் தயாரிப்பு

அல்சைமர் நோயில் நரம்பணுக்களை செயலிழக்கச் செய்யும் வகையிலான சிறிய மூலக்கூறு ஒன்றை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.  உலகளவில் அதிகரித்து வரும் டிமென்ஷியா நோயின் தடுப்பு மற்றும்   சிகிச்சையில், இந்த மூலக்கூறு சிறந்த மருந்தாக செயல்படும்.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான ஜவகர்லால் நேரு மேம்படுத்தப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் திரு டி கோவிந்தராஜு தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, டிஜிஆர்63 என்ற இந்த மூலக்கூறை வடிவமைத்து, உருவாக்கி உள்ளனர்.

அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட எலிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட இந்த மூலக்கூறு சிறந்த பலனை அளித்தது. அல்சைமர் நோய்க்குத் தற்போது தற்காலிகமான நிவாரணம் மட்டுமே வழங்கப்படுவதுடன், இந்த நோயை நேரடியாக குணப்படுத்துவதற்கான மருந்துகளுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. எனவே அல்சைமர் நோயை தடுப்பதற்கோ அல்லது முழுவதும் குணப்படுத்துவதற்கோ மருந்துகளின் தயாரிப்பு மிகவும் அவசியமாக உள்ளது.

Related Stories: