உங்களுக்கு தெரியுமா?.. கேரட்டுகள் ஆரம்பத்தில் ஊதா நிறத்தில்தான் இருந்தன.

*ஆக்டோபஸ்ஸுக்கு மூன்று இதயங்கள் உண்டு.

*உங்களுக்கு ஒருவரின் முகம் நினைவுக்கு வருகிறது என்றால், ஏதோ ஒரு நிகழ்வில் அவரை சந்தித்த நினைவுதான் முதலில் வரும். அவரை எப்போது சந்தித்தீர்கள் என்கிற காலக்கட்டம்

உடனடியாக நினைவுக்கு வராது.

*பார்பரா மில்லிசெண்ட் ராபர்ட்ஸ் என்றால் யார் தெரியுமா? உங்கள் பெண் குழந்தை விரும்பி விளையாடும் ‘பார்பி’ பொம்மையின் முழுப்பெயர் இதுதான்.

*கேரட்டுகள் ஆரம்பத்தில் ஊதா நிறத்தில்தான் இருந்தன.

*மூக்கை மூடிக்கொண்டிருக்கும் போது உங்களால் ‘ஹம்மிங்’ செய்ய முடியாது.

*அமெரிக்காவில் பிரபலமான மெக்டொனால்டு உணவகத்தின் எண்ணிக்கையைவிட பொதுநூலகங்களின் எண்ணிக்கை அதிகம்.

*ஜெஸ்ஸிகா என்கிற பெயர் இன்று உலகில் பரவலாக குழந்தைகளுக்கு சூட்டப்படுகிறது. முதன்முதலாக இப்பெயரை ‘மெர்ச்சண்ட் ஆஃப் வெனிஸ்’ என்கிற நாடகத்தின் கதாபாத்திரம்

ஒன்றுக்காக ஷேக்ஸ்பியர் உருவாக்கினார்.

*நீங்கள் மூச்சை ஆழ்ந்து இழுப்பதும், தொண்டையில் எதையோ முழுங்குவதையும் ஒரே சமயத்தில் செய்ய முடியாது.

*மனிதர்களைப் போலவே தங்களில் ஒவ்வொருவருக்கும் பெயர் வைக்கும் வழக்கம் கொண்டவை டால்பின் மீன்கள்.

*ஒரு பேப்பரை 42 முறை உள்மடிப்புகளாக மடிக்க முடியுமானால், அப்பேப்பரின் நீளம் பூமியிலிருந்து நிலவு வரையிலானதாக இருக்கும்.

*ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் புதிய பழமரங்கள், காடுகளில் உருவாகக் காரணம் அணில்களின் ஞாபக மறதியே. உணவுக்காக அவை சேர்க்கும் பழக்கொட்டைகளை எங்கே சேமித்துப் புதைத்தோம் என்று அவை மறந்துவிடுவதாலேயே இம்மரங்கள் உருவாகின்றன.

*ஜெஸ்ஸிகா என்கிற பெயர் இன்று உலகில் பரவலாக குழந்தைகளுக்கு சூட்டப்படுகிறது. முதன்முதலாக இப்பெயரை ‘மெர்ச்சண்ட் ஆஃப் வெனிஸ்’ என்கிற நாடகத்தின் கதாபாத்திரம்

ஒன்றுக்காக ஷேக்ஸ்பியர் உருவாக்கினார்.

*புதன் கிரகத்தின் ஒரு நாள் என்பது, அதன் ஓர் ஆண்டைவிட அதிகம்.

*சனி மற்றும் வியாழன் கிரகங்களில் பொழியும் மழைகளில் வைரம் இருப்பதாக நம்பப்படுகிறது.

**பிரான்சில் மரணதண்டனை நிறைவேற்ற தலையை வெட்டும் ‘கில்லெட்டின்’ கருவியை 1979ஆம் ஆண்டுதான் அந்நாடு கைவிட்டது. 1949ஆம் ஆண்டு கடைசியாக ஒருவரின் தலை இக்கொலைக் கருவியால் வெட்டப்பட்டது.

ஒவ்வொரு இரண்டு நிமிடத்துக்கும் உலக மக்கள் இன்று செல்போன்களில் எடுக்கும் புகைப்படங்களின் எண்ணிக்கை, பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஒட்டுமொத்த உலக மக்கள்தொகையின் எண்ணிக்கையை விடவும் அதிகம்.

*ப்ளூட்டோ என்கிற கிரகத்தை மனிதர்கள் கண்டறிந்த நாளிலிருந்து, அது ஒருமுறை கூட சூரியனை முழுமையாக சுற்றிவரவில்லை. எனவேதான் அதை சூரியனின் கிரகமாக அங்கீகரிக்க முடியவில்லை.

Related Stories: