நரம்பியல் துறையை கலக்கிய முதல் பெண் மருத்துவர்

நன்றி குங்குமம் தோழி

ஆசியாவின் நரம்பியல் அறுவை சிகிச்சையின் முதல் பெண் நிபுணரும், உலக அளவில் மூன்றாவது நரம்பியல் அறுவை சிகிச்சை  நிபுணருமான டாக்டர் டி.எஸ். கனகா தனது 86 வயதில் இறுதி மூச்சை கடந்த புதன்கிழமை அன்று நிறுத்திக்கொண்டார். பெண்கள் அதிகம்  விரும்பி நரம்பியல் பிரிவைத் தேர்வு செய்து படிக்க முக்கியத் தூண்டுகோலாக இருந்ததோடு, குறைந்தது 80 பெண்களையாவது தனது பணிக்காலத்தில் நரம்பியல் துறையில் அறுவைசிகிச்சை நிபுணராக மாற்றிய பெருமைக்குச் சொந்தக்காரர் இந்த மருத்துவர்.

பேராசிரியராய்  நீண்டகாலம் சென்னை மருத்துவக்கல்லூரியின் நரம்பியல் துறையிலும், நரம்பியல் அறுவை சிகிச்சை துறையிலும் பணியாற்றியதோடு,  இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே போர் நடந்த போது, ராணுவத்தில் முக்கிய மருத்துவ அதிகாரியாகவும் இரண்டு ஆண்டுகள்  பணியாற்றி இருக்கிறார். தனக்கு கிடைத்த ஓய்வூதியத்தினைக் கொண்டு, சென்னை குரோம்பேட்டையில்  ஸ்ரீ சந்தான கிருஷ்ணா பத்மாவதி சுகாதாரம் மற்றும்  ஆய்வு மையத்தை நிறுவி, தனது இறுதி மூச்சுவரை ஏழை எளிய மக்களுக்கும், முதியோர்களுக்கும் மருத்துவ உதவிகளைச் செய்து  வந்தார்.

‘‘என்னுடைய 11 வயதில் இருந்து நான் அத்தையைப் பார்த்து வளர்ந்து வந்தேன். அதனால்தான் அவரைப் போலவே நரம்பியல்  நிபுணராக என்னால் சிறப்பாக வர முடிந்தது. எங்கள் குடும்பத்தில் நான் 2-வது நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்’’ எனத் தன்  அத்தையின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார், டாக்டர் கனகாவின் மருமகளான டாக்டர் விஜயா. தனது அத்தையான டாக்டர் கனகா  ‘மூளை பேஸ்பேக்கர்’ பிரிவில் மிக அதிகமான ஆர்வத்துடன் செயல்பட்டதாகவும் நினைவு கூர்ந்தார்.“ஸ்டீரியோடாக்டிக் பிரிவு மற்றும்  பெருமூளை வாதம் (செரிபல் பிளாசி) பிரிவிலும் மருத்துவர்களோடு இணைந்து மருத்துவர் கனகா பணியாற்றியுள்ளார்.

-மகேஸ்வரி

Related Stories: