பாஜ அரசு கொண்டுவந்துள்ள சட்டதிருத்தத்தால் தொழிலாளர்களுக்கு பல பாதிப்பு தொமுச பேரவை குற்றச்சாட்டு

சென்னை: தொமுச பேரவையின் அகில இந்திய அமைப்புச்செயலாளர் வேலுசுவாமி வெளியிட்டுள்ள அறிக்கை: தொழில்பாதுகாப்பு சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சம்பந்தமான தொகுப்பில் பல குறைபாடுகளும், முரண்பாடுகளும்  உள்ளன. முதலாவதாக தொழிற்சாலையை வரையறை செய்யும் எண்ணிக்கையை அதிகப்படுத்தி இருப்பதன் மூலம் நாட்டிலுள்ள 90 சதவீதத்திற்கும் அதிகப்படியான தொழிலாளர்களை இச்சட்ட தொகுப்பின் மூலம் பயன் பெறுவதிலிருந்து  ஒதுக்கியுள்ளது. இந்திய உழைப்பாளி மக்களுக்கு எதிரான இந்த சட்ட திருத்தங்களை அரசு திரும்ப பெற வேண்டும். தமிழகத்தில் உள்ள தொழிலாளர் விரோத அரசை அகற்றி, மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியை அரியணையில்  அமர்த்துவதன் மூலம் தொழிலாளர்களுக்கு இத்தொகுப்பின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள மிகப்பெரிய பாதிப்புக்களிலிருந்து தொழிலாளர்களை பாதுகாக்க முடியும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: