கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசம் : நாட்டு மக்களுக்கு ஜப்பான் அரசு சூப்பர் அறிவிப்பு!!

டோக்கியோ : நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்க உள்ளதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 218 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.ஜப்பானை பொறுத்தவரை கொரோனா நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சமீபகாலமாக சிறிதளவு அதிகரித்து வருகிறது. மற்ற நாடுகளை போல அல்லாமல் ஜப்பானில் சுமார் 1.50 லட்சம் பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கூறியிருந்தார். அதன்படி மொத்த மக்கள் தொகையான 12.65 கோடி பேருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான மசோதா ஜப்பான் நாட்டு நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இவர்களில் 6 கோடி பேருக்கு அமெரிக்காவின் பைசர் நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசிகளும் நாட்டின் மற்றொரு நிறுவனமான மார்டானாவிடம் இருந்து 2.5 கோடி தடுப்பு மருந்துகளும் வாங்கப்பட உள்ளன. ஆஸ்டிராஜெனகாவிடம் இருந்தும் 12 கோடி தடுப்பூசிகள் பெறப்படும் என்பதையும் ஜப்பான் அரசு உறுதி செய்துள்ளது. இதற்கு ஜப்பான் தொகையில் 671.4 பில்லியன் யென் செலவுப்பிடிக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த இந்திய தொகையில் சுமார் 47,332 கோடி ரூபாயாகும்.

Related Stories: