டிசம்பரில் ஏறுமுகத்தில் தங்கம் விலை... தொடர்ந்து 3வது நாளான இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ. 37,128-க்கு விற்பனை

சென்னை: தங்கம் விலை கடந்த 3 மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் உச்சத்தை தொட்டதால் நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் தீபாவளி பண்டிகையை தொடர்ந்து தங்கம் விலை சரிவை சந்தித்து வந்தது. இந்நிலையில், நவம்பர் 30ம்தேதி கிராமுக்கு 55 குறைந்து ஒரு கிராம் 4,519க்கும், சவரனுக்கு 440 குறைந்து ஒரு சவரன் 36,152க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக ஒரு வாரத்தில் மட்டும் பவுனுக்கு 1,832 வரை குறைந்தது. இது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வந்தது.

இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் காலை தங்கம் விலை திடீரென அதிகரித்தது. அதாவது கிராமுக்கு 13 அதிகரித்து ஒரு கிராம் 4,532க்கும், சவரனுக்கு 104 அதிகரித்து ஒரு சவரன் 36,256க்கும் விற்கப்பட்டது. 2வது நாளாக நேற்று காலையும், மாலையும் தங்கம் விலை உயர்ந்தது.ஒரு சவரன் தங்கம் 36,888க்கும் விற்பனையானது. அதே போல் 3வது நாளாக இன்றும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ. 37,128-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.30 உயர்ந்து ரூ. 4,641-க்கு விற்பனை செய்யப்படுகிறது.தொடர்ச்சியாக குறைந்து வந்த தங்கம் திடீரென அதிகரித்து வருவது நகை வாங்குவோருக்கு சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.67.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: