ஆஸி. அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி: 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 13 ரன்களை வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 302 ரன்களை குவித்தது. அதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 289 ரன்களை எடுத்து தோல்வி அடைந்தது. இந்நிலையில் தமிழக வீரர் நடராஜன் முதல் ஆட்டத்திலேயே 2 விக்கெட்களை வீழ்த்தினார். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

Related Stories: