செல்போன், மின்சாரம் இல்லாமல் வாழும் 48 வயது நபர்...

பிரிட்டனைச் சேர்ந்தவர் புருனோ ஃ பாரிக்(48). இவருக்கு மின்சாரம் மற்றும் மொபைல் என்றால் அலர்ஜி. காரணம் அதில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சினால் அவரது உடலில் ஒருவித அலர்ஜி ஏற்படுகிறது. மருத்துவ துறையில் இந்த நோய்க்கு எலக்ட்ரோ மேக்னடிக் ஹைபர்சென்சிட்டிவிட்டி என்று பெயர் வைத்துள்ளனர். தற்போது வெறும் 31 கிலோ எடையுடன் வாழ்ந்து வரும் இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்புவரை மற்றவர்களை போல சாதாரணமாகத்தான் வாழ்ந்து வந்துள்ளார்.

ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ள இவர் செல்போன், மின்சாரம் இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். செல்போன் போன்ற சாதனங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு யாரையும் பாதிக்காது என்று சொல்ல முடியாது. அதற்கு தான் வாழும் உதாரணமாக இருப்பதாக புருனோ ஃ பாரிக் கூறினார்.

Related Stories: