நீதிக்கான நெடும் பயணம்

நன்றி குங்குமம் தோழி

தன்பாலீர்ப்பை அங்கீகரித்து தீர்ப்பளித்திருக்கிறது இந்திய உச்ச நீதிமன்றம். சமகால மனித உரிமையிலும் சரி, இந்திய நீதித்துறையிலும் சரி, இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக பார்க்கப்படுகிறது. இதன் பின்னணியை பார்த்தோமேயானால், பொது சமூகத்தில், எதிர்பாலீர்ப்பை தவிர மற்ற பாலியல் ஈர்ப்புகள் அனைத்துமே இயற்கைக்கு எதிரானதாக கருதப்படுகிறது. அதாவது ஆணுக்கும் பெண்ணுக்குமான ஈர்ப்பே சட்டப்படியானதாக இதுவரை இருந்தது. ஆணும் ஆணும் கொள்ளும் ஈர்ப்பு அல்லது பெண்ணும் பெண்ணும் கொள்ளும் ஈர்ப்பே தன்பாலீர்ப்பு எனப்படுகிறது. இது இந்தியா உட்பட பல நாடுகளிலும் தண்டனைக்குரிய குற்றமாகவும் இருந்தது, இருக்கிறது.

எங்கள் சமூகம் விடுதலை பெறும்!

‘லேடீஸ் அண்ட் ஜென்டில் வுமன்’ ஆவணப்படத்தின் இயக்குநர் மாலினி ஜீவரத்தினத்திடம் தீர்ப்பு குறித்து கேட்ட போது...“தீர்ப்பு வருவதற்கு முன்பு 50 சதவீதம்தான் எங்களுக்கு ஆதரவாக வருவதற்கு வாய்ப்பு இருக்கும் என்றிருந்தேன். ஆனால் தீர்ப்பு எங்களுக்கு ஆதரவாக வந்தபோது அந்த சந்தோஷ உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. இந்த நாட்டில் சாதி சார்ந்து, மதம் சார்ந்து, மொழி சார்ந்து இருக்கும் பாகுபாட்டிற்கே இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. பாலினத்தை இந்த சமூகம் அங்கீகரிக்க இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கிறது.

அதற்கு பெரும் போராட்டம் நடந்தது. ஆனால் பாலீர்ப்பை பொறுத்தவரை ஆண்,பெண் உடலுறவிலே அவ்வளவு தடைகள் இருக்கிறது இங்கு. இப்படி இருக்க ஓர்பாலீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு இந்த சமூகம் வளர்ந்திருக்கிறதா என்கிற பெரிய கேள்வி இருக்கிறது. அந்த புரிதலுக்கான போராட்டத்தையும் நாங்கள் நிறுத்தவில்லை. இந்த நிலையில்தான் இந்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமைகிறது. வரலாற்றில் இந்த சமூகம் இத்தனை ஆண்டுகள் ஒடுக்கப்பட்டிருந்திருக்கிறது என்று நீதிமன்றம் வருத்தப்பட்டிருக்கிறது.

ஒரே புரிதலோடு 5 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியது மகிழ்ச்சியின் உச்சத்தில் ஆழ்த்தியது. இதன் பிறகு தீண்டாமையை எங்கள் சமூகம் அதிகமாக சந்திக்கும். ஆனால் சட்டம் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறது. இது நாள் வரை சட்டம், கலாசாரம், மதம் இந்த மூன்று விஷயங்களை வைத்துத்தான் எங்களை மிரட்டி வந்தனர். பைபிள், குரான், மநுதர்மம் ஆகியவற்றில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை வைத்துத்தான் எங்களை மத அடிப்படைவாதிகள் ஒடுக்கிவந்தனர். ஆனால் அதிலிருக்கும் எதிர்மறையான கருத்துகளுக்கு எதிராகக் கேள்வி எழுப்பினால் அவர்களிடமிருந்து எந்த பதிலும் கிடைப்பதில்லை.  

இது இந்தச் சமூகத்தின் உச்சபட்ச அறியாமையைக் காட்டுகிறது.  இப்போது மதம், கலாசாரம் கடந்து சட்டம் எங்களுக்கு வழிவிட்டிருக்கிறது. கூடிய விரைவில் கலாசாரம், மதத்திலிருந்தும் எங்கள் சமூகம் விடுதலை பெறும்.’’

- ஜெ.சதீஷ்

Related Stories: