அறிவோமா

நன்றி குங்குமம் தோழி

*‘விட்டதடி ஆசை  ஓட்டோடு’ என்றொரு சொலவடை உண்டு. விளாம்பழம் காயாக இருக்கும்போது, ஓட்டோடு ஒட்டிய நிலையில்  இருக்கும். பழுத்து பக்குவத்திற்கு வந்ததும் எடை குறைந்து, உள்ளுக்கு உள்ளேயே ஓட்டை விட்டு விலகி விடும்.

* நன்கு பழுத்த பழம், புளிப்பு கலந்த இனிப்பு சுவை தரும்.

* பழத்தினுள் சதையுடன் சிறிய விதைகளும் கலந்திருக்கும்.

* விளாம்பழத்தில் புரதம் மற்றும் வைட்டமின் சி, வைட்டமின் ஏ சத்தும், இரும்பு, சுண்ணாம்பு உள்ளிட்ட சத்துக்களும் உள்ளன.

* விளாம்பழம் மற்றும் அதன் மேல்புற ஓடு, மரத்தின் வேர், பட்டை, இலை ஆகியவை மருத்துவ குணம் கொண்டவை.

* உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது.

* விளாங்காயில் மிக உயிர்ச்சத்தும் உள்ளது.

* ஜீரணத் தன்மையை அதிகரித்து, நல்ல பசியைத் தூண்டுகிறது.

* ரத்தத்தால் உண்டாகும் தலைவலி, கண் பார்வை மங்கல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை-கால்களில் அதிக வேர்வை,  இளநரை, நாவில் ருசி உணர்வு அற்ற நிலை இவைகளை குறிப்பிடுகிறது.

* எலும்புகளுக்கு பலம் தருவதோடு முதுமையில் ஏற்படும் ‘ஆஸ்டியோ பெரோஸிஸ்’ என்னும் எலும்புகள் உடையக்கூடிய நோய்  ஏற்படாமல் தடுக்கிறது.

* இதயத்திற்கு நல்ல பலம் தருகிறது.

* ரத்த ஓட்டத்தைச் சீராக்கி நரம்புகளுக்கு வலிமை தருகிறது.

* பிரசவமான பெண்கள் விளாம்பழத்தை கூழாக்கிக்

குடித்து வந்தால், உள்ளுறுப்புகள் பலம் பெறும்.

* தயிருடன் விளாங்காயை பச்சடி போல செய்து சாப்பிட்டால் வாய்ப்புண், அல்சர் குணமடையும்.

* வெல்லத்துடன் விளாம்பழத்தை பிசறி சாப்பிட்டு வர, நரம்புத்தளர்ச்சி விரைவில் குணமடையும்.

- இல.வள்ளிமயில்,மதுரை

Related Stories: