சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட, 17 துணை மருத்துவ படிப்புகளில் சேர 2020 - 21 கல்வி ஆண்டில் சேர மாணவர்கள் சேர விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தை பூர்விகமாக கொண்ட மாணவர்கள் tnhealth.tn.gov.in மற்றும் tnmedicalselection.net என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய அக்., 15ம் தேதி கடைசி நாள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலர், தேர்வுக்குழு, 162, ஈ.வே.ரா.பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை, 10 என்ற முகவரிக்கு தபால் வாயிலாக அக். 17ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.