கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: டி.மகேஸ்வரி (பெண் காவல் ஆய்வாளர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, புனித தோமையார்மலை, தெற்கு மண்டலம், சென்னை) எம்.லதா (பெண் காவல் ஆய்வாளர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, முசிறி-துறையூர், திருச்சி), என்.செல்வராஜூ  (காவல் உதவி ஆய்வாளர், மத்திய புலனாய்வு பிரிவு, சேலம்), சோ.சண்முகநாதன் (தலைமை காவலர் 731, திருவில்லிபுத்தூர் தாலூகா காவல் நிலையம், அயல்பணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம், விருதுநகர்), சு.ராஜசேகரன் (தலைமை காவலர் 1420, கீழ்கொடுங்காலூர் காவல் நிலையம், அயல்பணி மத்திய புலனாய்வு பிரிவு, திருவண்ணாமலை) ஆகியோருக்கு, கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக காந்தியடிகள் காவலர் விருது வழங்க முதலவர் உத்தரவிட்டுள்ளார்.இந்த விருது, முதல்வரால் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் நாள், குடியரசு தினத்தன்று வழங்கப்படும். விருதுடன், பரிசுத்தொகையாக ரூ.40,000 ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: