ரேஷன் கடைக்கான பாமாயிலுக்கு ரூ.47 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு: அரசு உத்தரவு

சென்னை: ரேஷன் கடைகளில் பாமாயில் வழங்க ரூ.47 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: ரேஷன் கடைகளில் மாதம் ஒன்றுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பாமாயில் வழங்க 15,600 கிலோ லிட்டர் தேவைப்படுகிறது. மாத இறுதியில் கிடைப்பதில்லை என இருந்து புகார் வந்துள்ளது. இதையடுத்து கூடுதல் பாமாயில் கொள்முதல் செய்ய ரூ.47 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை தங்குதடையின்றி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பாமாயில் வழங்கப்பட உள்ளது.

Related Stories: