அபராதம் வசூலிப்பது அரசின் நோக்கமல்ல: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆலந்தூர் மண்டலத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வணிக வளாகங்கள் மற்றும் கட்டுமான பணி நடைபெறும் இடங்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்களிடம் முகக் கவசம் அணிவது குறித்து எடுத்துரைத்து அதன் அவசியம் குறித்து விளக்கினார். இதில் தெற்கு வட்டார துணை ஆணையர்ஆல்பி ஜான் வர்கீஷ் பங்கேற்றார். பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் பொதுமக்களிடம் கூறியதாவது: முகக் கவசம் அணியாமல் வெளியே வரும் நபர்களுக்கு தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 ன்படி ரூ. 200 அபராதமும் பொது இடங்களில் துப்பினால் ரூபாய் 500 அபராதமும் சமூக இடைவெளியை கடைபிடிக்காவிடில் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும். அபராதம் வசூலிப்பது அரசின் நோக்கமல்ல நோய் தொற்றிலிருந்து பொது மக்களை காப்பாற்ற முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் மிகவும் முக்கியமான ஒன்று என்றார்.

Related Stories: