துணை ஜனாதிபதி வெங்கையாவுக்கு கொரோனா

மத்திய அமைச்சர்கள், எம்பி.க்கள், எம்எல்ஏ.க்கள், பல்வேறு கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய அமைச்சரவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட 10க்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டு, அவர்களில் சிலர் குணமாகி விட்டனர். இன்னும் சிலர் சிகிச்சையில் இருக்கின்றனர். ரயில்வே துணை அமைச்சர் சுரேஷ் அங்காடி, கொரோனா தொற்றால் சமீபத்தில் இறந்தார். இந்நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது நேற்று இரவு உறுதியானது. இவருக்கு வழக்கமாக செய்யப்படும் மருத்துவ பரிசோதனையின் போது நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதன் முடிவு நேற்றிரவு கிடைத்தது. அதில், அவருக்கு தொற்று உறுதியானது. ஆனால், அவருக்கு காய்ச்சல் உட்பட கொரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லை. அவர் ஆரோக்கியமாகவே இருக்கிறார். அதனால், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும்படி மருத்துவர்கள் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். அவருடைய மனைவி உஷாவுக்கு தொற்று இல்லை. இருப்பினும், அவரும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Related Stories: