வேளாண் சட்டங்கள் சர்ச்சை: கறுப்பு பணம் வரும் வழிகள் அடைக்கப்பட்டதால் ஆத்திரம்: மோடி குற்றச்சாட்டு

டேராடூன்: ‘‘வேளாண் சட்டங்கள் மூலம் கறுப்பு பணம் வரும் வழி அடைக்கப்பட்டு விட்டதால், சிலர் ஆத்திரம் அடைந்துள்ளனர். அதனால்தான், இச்சட்டங்களை எதிர்க்கின்றனர்,’’ என பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளனர். நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ள 3 வேளாண் சட்டங்கள், நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சட்டங்களை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும்ள், விவசாய சங்கங்களும் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றன. டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் ராஜபாதையில் டிராக்டர் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த போராட்டம் குறித்து பிரதமர் மோடி நேற்று கூறியதாவது: நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் விவசாயிகள், தொழிலாளர்கள், சுகாதாரம் தொடர்பாக பல்வேறு சீர்த்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால், சிலர் இந்த சீர்த்திருத்தங்களை எவ்வாறெல்லாம் எதிர்க்கிறார்கள் என்பதை பாருங்கள். விவசாயிகள் புனிதாக கருதும் டிராக்டரையும், விவசாய கருவிகளுக்கும் தீ வைத்து எரித்து விவசாயிகளை அவர்கள் அவமதித்து உள்ளனர். ஷவேளாண் சட்டத்தை எதிர்ப்பதன் மூலம், அரசியல் செய்வதற்கான ஒரு வழி அவர்களுக்கு கிடைத்துள்ளது. இதை எதிர்ப்பவர்கள் இடைத்தரகர்களுக்கு ஆதரவானவர்கள்.

அவர்களுக்கு கறுப்பு பணம் கிடைக்கும் வழி அடைக்கப்பட்டதால் ஆத்திரமடைகின்றனர். பெரிய சீர்த்திருத்த நடவடிக்கைகளை எதிர்ப்பதன் மூலம், தங்களை சமூகத்தில் பொருத்தமற்றவர்களாக ஆக்கிக் கொள்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் இந்த அரசியலுக்குப் பின்னால், நான்கு தலைமுறைகளாக மற்றவர்களின் தோளில் சவாரி செய்து அதிகாரம் செலுத்தியது முடிவு கட்டப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு கட்சியின் விரக்தி உள்ளது. இவ்வாறு கூறினார்.

Related Stories: