மெகபூபாவுக்கு வீட்டுக் காவல்: ஜம்மு அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி:  காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இம்மாநிலம் கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி  ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்காக பிரிக்கப்பட்டது. இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி உள்ளிட்டோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதை எதிர்த்து, மெகபூபாவின் மகள் இல்டிஜா, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ஒரு ஆண்டுக்கும் மேலாக வீட்டுக்காவலில் இருக்கும் தனது தாயை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.  

நேற்று இதை விிசாரித்த நீதிபதிகள் எஸ்கே கவுல், ரிஷிகேஷ் ராய் அமர்வு,  இல்டிஜாவும், அவருடைய சகோதரரும் காவலில் உள்ள மெகபூபாவை சந்தித்து பேச அனுமதி அளித்தது. மேலும், மெகபூபாவின் வீட்டுக்காவல் நீட்டிக்கப்படுவது குறித்து 15 நாட்களில் பதில் அளிக்கும்படி ஜம்மு காஷ்மீர் அரசுக்கும் உத்தரவிட்டது.

Related Stories: