போலி மருத்துவர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. மேலும், தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடாது என்று அரசு உத்தரவால் பெரும்பாலான மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவது தவிர்க்கப்பட்டது. இந்நிலையில், திருவள்ளூர் அடுத்த பூண்டியில் பிஎஸ்சி கெமிஸ்ட்ரி மற்றும் இசிஜி பயிற்சி முடித்துவிட்டு சீனிவாசன்(45) என்பவர் பொது மருத்துவம் பார்ப்பதாக மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு பல புகார்கள் வந்தன. இதையொட்டி, ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் தீபா என்பவருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொண்ட விசாரணையில் அவர் போலி மருத்துவர் என்பது உறுதியானது. இதனையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் புல்லரம்பாக்கம் காவல்துறையினர் போலி மருத்துவர் சீனிவாசனை கைது செய்தனர். போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: