டிடிஎஸ் விவரங்களில் முரண்பாடு உள்ளதால் 82% வரி செலுத்துவோருக்கு துன்புறுத்தல்: கணக்குத் தணிக்கை அலுவலகம் தகவல்

புதுடெல்லி: டிடிஎஸ் விவரங்களில் முரண்டாடு காணப்பட்டதாக, கடந்த 3 ஆண்டுகளில் 82 சதவீத வரி செலுத்துவோர் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர் என, மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆண்டு வருமான உச்சவரம்புக்கு மேல் சம்பளம் வாங்குவோருக்கு சம்பளத்தில் வரிப் பிடித்தம் (டிடிஎஸ்) செய்யப்படுகிறது. டிடிஎஸ் பிடித்தம் செய்பட்டவர்கள், வருமான வரி கணக்குத் தாக்கலின்போது, உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து, பிடித்தம் செய்த வரியை திரும்பப் பெறலாம்.

இந்நிலையில், வருவாய்த்துறை மீதான கணக்குத் தணிக்கை அறிக்கையை, மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகம் (சிஏஜி) நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் சமர்ப்பித்தது. இதில், கடந்த 3 ஆண்டுகளில், அதில், வரி செலுத்தும் தனி நபர்கள் 82 சதவீதத்துக்கு மேற்பட்டோர் வரி துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மாதச்சம்பளதாரர்கள். மேலும், 26ஏஎஸ் படிவத்தில் உள்ள விவரமும், கணக்குத் தாக்கல் செய்தவர் குறிப்பிட்ட விவரமும் முரண்பாடாக உள்ளதாக கூறி, வரி ரீபண்ட் கோரிக்கையை வருமான வரித்துறை நிராகரித்துள்ளது. படிவம் 16 மற்றும் 16ஏ சமர்ப்பித்தும் வருமான வரித்துறை ஏற்கவில்லை.

ஆவணங்கள் சமர்ப்பித்தும் இவ்வாறு ரீபண்ட் தராமல் நிராகரித்தை, வரி செலுத்துவோருக்கு நேர்ந்த துன்புறுத்தலாகவே கருதவேண்டும். பிடித்தம் செய்த நிறுவனம் அரசிடம் டிடிஎஸ் செலுத்த தவறியிருந்தால், அந்த நிறுவனம் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், வரி செலுத்துவோர் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 2016-17 நிதியாண்டில் ரூ.3.43 லட்சம் கோடி டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இது 2018-19 நிதியாண்டில் ரூ.4.51 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மொத்த நேரடி வருவாயில் இது 35 சதவீதம் என சிஏஜி அறிக்கையில் தெரிவித்துள்ளது. வரி விசாரணையில் வெளிப்படை தன்மை கொண்டுவரப்பட்டுள்ளது, செலுத்துவோர் துன்புறுத்தப்பட மாட்டார்கள் என பிரதமர் உறுதியளித்துள்ள நிலையில், சிஏஜியின் இந்த அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: