சென்னையில் கொரோனா பேரிடரில் அதிகரிக்கும் வழிப்பறி...!! மயிலாப்பூரில் 5 பேர் கைது!!!

சென்னை:  சென்னை மயிலாப்பூர் பகுதியில் ஆயுதங்களால் தாக்கி தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் பொதுமுடக்கம் காரணமாக பல்வேறு இடங்களில் வழிப்பறி கொள்ளைகள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் தற்போது ஆழ்வார்பேட்டை சி.வி ராமன் சாலையில் சவாரி செல்வதற்காக காத்திருந்த ஆட்டோ ஓட்டுனர் பாஸ்கர் என்பவரை தாக்கி கொள்ளையர்கள் 13 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போனை பறித்து சென்றுள்ளனர். பின்னர், அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அங்குள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் வழிப்பறி செய்த மர்ம நபர்கள் தப்பி சென்ற இருசக்கர வானகம் விபத்துக்குள்ளானதை கண்டறிந்தனர்.

தற்போது ஆட்டோ ஓட்டுனரை கத்தியால் தாக்கும் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இதுதொடர்பாக திருவான்மியூரை சேர்ந்த விஜயகுமார், அடையார் ராமு மற்றும் யுவராஜ் உள்ளிட்ட 5 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் சென்னை சாந்தோம் அருகே நடந்து சென்ற இளைஞர் ஒருவரை ஆயுதங்களால் தாக்கி பணம் பறித்ததாக தெரிவித்துள்ளனர். மேலும், மயிலாப்பூரை சேர்ந்த பாஜக நிர்வாகி சந்தானம் என்பவரை கத்தியை காட்டி மிரட்டி 10 ஆயிரம் ரூபாய் பணம் பறித்துள்ளத்தும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் இதுதொடர்பான விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Related Stories: