விழுப்புரத்தில் கொரோனா அச்சமின்றி மீன்பிடி திருவிழாவில் பங்கேற்ற கிராம மக்கள்: சமூக இடைவெளி இல்லாததால் தொற்று பரவும் அபாயம்..!!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் நத்தமேடு பகுதியில் கொரோனா அச்சமின்றி மீன்பிடி திருவிழாவில் ஏராளமான கிராம மக்கள் பங்கேற்றுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கும் நிலையில் உள்ளது. இதில் தற்போது 800க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் நத்தமேடு பகுதியில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதனால் கொரோனா தொற்று அதிகளவு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் நத்தமேடு பகுதியில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ம் தேதி மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில் இந்த ஆண்டு ஆடி 18ம் தேதி பொதுமுடக்கம் காரணமாக திருவிழா குறித்த செய்தியினை ஊர் தலைவர்கள் அறிவிக்கப்படவில்லை. பின்னர் கிராம மக்கள் அனைவரும் இணைந்து மீன்பிடி திருவிழாவை நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து ஊர் தலைவர்கள் மீன்பிடி திருவிழாவை நடத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட என அனைவரும் மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்டனர். மேலும் இவர்கள் அனைவரும் கொரோனா அச்சமின்றி, சமூக இடைவெளியை கடைபிடிக்காமலுல், முகக்கவசம் அணியாமலும் திருவிழாவில் பங்கேற்றுள்ளனர். இதனால் வைரஸ் தொற்று அதிகளவு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: