அகமதாபாத் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு ரூ. 4 லட்சம்; மத்திய அரசு ரூ.2 லட்சம் நிதியுதவி!!

அகமதாபாத்:  அகமதாபாத்தில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் வழங்க குஜராத் மாநில முதல்வர் விஜய ரூபானி உத்தரவிட்டுள்ளார்.

அகமதாபாத் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து!!

குஜராத் மாநிலம்  அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தானது மருத்துவமனையின் 4வது வார்டில் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வார்டில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 5 ஆண்கள், 3 பெண்கள் உயிரிழந்தவர்கள் ஆவர். மேலும் அதே வார்டில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தீ விபத்தில் சிக்கிய நிலையில், பலர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் படுகாயமடைந்த அனைவரும் வேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன.

பிரதமர் மோடி  நிதியுதவி

இதனைத்தொடர்ந்து தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து விபத்து தொடர்பாக குஜராத் முதலமைச்சர் விஜய்ரூபானி மற்றும் மாநகராட்சி மேயரிடம் பிரதமர் மோடி பேசியுள்ளார். மேலும் காயமடைந்த அனைவரும் விரைந்து குணமடைய வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து பிரதமரின் தேசிய நிவாரண நிதியம், தீ விபத்தில் இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

ரூ. 4 லட்சம் வழங்க குஜராத் அரசு உத்தரவு!!

அதே போன்று தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் வழங்க குஜராத் மாநில முதல்வர் விஜய ரூபானி உத்தரவிட்டுள்ளார். படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கவும் மாநில அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த தீ விபத்து தொடர்பாக கூடுதல் தலைமைச் செயலாளர் (உள்துறை) சங்கீதா சிங் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் விஜய் ரூபானி, சம்பவம் குறித்து  மூன்று நாட்களுக்குள் அறிக்கை கேட்டுள்ளார்.

Related Stories: