புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திணிக்க முற்பட்டால் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்: திமுக மாணவரணி செயலாளர் பேட்டி

சென்னை: திமுக மாணவரணி மாநில செயலாளர் எழிலரசன் எம்எல்ஏ வீடியோ கான்பரன்ஸ் மூலம் நிருபர்களிடம் கூறியதாவது:

கலைஞர் ஆட்சியில் அதிக எண்ணிக்கையில் கல்லூரிகள் மருத்துவ கல்லூரிகள் அமைத்து உயர் கல்வியை விரிவுபடுத்தினார். ஆனால் தற்போதைய கல்விக் கொள்கையில் பல்கலைக்கழகங்களை மத்திய அரசு அபகரிக்கும் வகையில் திட்டமிட்டுள்ளது. திமுக தலைவரின் தொடர் வலியுறுத்தலுக்கு பிறகே முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்தி திணிப்பை எதிர்த்திருக்கிறார். கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வு என்பது கல்வியை வளர்ப்பதற்கு பதிலாக பயிற்சி நிறுவனங்களை வளர்த்து கல்வியை வணிகமயமாக்கிவிடும் அபாயம் உள்ளது. புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திணிக்க முற்பட்டால் மாநிலம் தழுவிய பெரும் போராட்டத்தை திமுக முன்னெடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: