அதிமுக கொடியை காட்டி எம்எல்ஏ ஆன எஸ்.வி.சேகர் 5 ஆண்டு சம்பளத்தை திருப்பி தருவாரா? அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்

சென்னை: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மதியம் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் படகில் கடலில் சென்று ரூ.18 கோடி மதிப்பீட்டில் 200 பவளப்பாறைகள் அமைக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது, இந்தியாவிலேயே மீன் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. குஜராத்தை பின்னுக்குத் தள்ளி 7 லட்சத்து 75 ஆயிரம் டன் மீன் தமிழகத்தில் பிடிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், கடல் மீன்பிடித்தலை பலப்படுத்தவும், நாட்டுப்படகு மீன்பிடிப்பை ஊக்கப்படுத்தவும் செயற்கை பவளப்பாறைகள் அமைக்கப்படுகிறது. பாறை, காலா, கொடுவா போன்ற மீன் உற்பத்தி இதனால் அதிகரிக்கும். இந்த திட்டத்தால் 35 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் பயனடைவார்கள். அதிமுக கொடியில் இருந்து அண்ணாவை நீக்க வேண்டும் என பேசியிருக்கிறார் எஸ்.வி.சேகர். மான, ரோஷம் இருந்தால் அவர் அதிமுக எம்எல்ஏவாக ஐந்து ஆண்டு இருந்த சம்பளம், பென்சனை திருப்பித் தருவாரா. இவ்வாறு ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Related Stories: