காணொலி காட்சி மூலம் மருத்துவ ஆலோசனை இ-சஞ்சீவனி ஓபிடி திட்டத்தில் தமிழகத்தில் 5,461 பேர் பயன்

சென்னை: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த காலத்தில் வீட்டில் இருந்து மருத்துவர்களிடம் ஆலோசனை பெறும் வகையில் மத்திய அரசு இ - சஞ்சீவனி ஓபிடி என்ற திட்டத்தை தொடங்கியது. இதன் மூலம் பொதுமக்கள் இணையதளம் வழியாக வீட்டில் இருந்தபடி மருத்துவர்களிடம் ஆலோசனை பெறலாம். இதன்படி பொதுமக்கள் www.esanjeevaniopd.in என்ற இணையதளத்தில் தொலைபேசி எண்ணை பதிவு செய்ய கடவு எண் மூலம் பயன்படுத்தலாம். இதனைத் தொடர்ந்து மருத்துவரை சந்திப்பதற்கான டோக்கன் எண் வழங்கப்படும்.

இதைக் கொண்டு இணையதளத்தில் மருத்துவரை சந்திப்பதற்கான பிரிவில் நுழைய வேண்டும். இதன்பிறகு திரையில் call now என்ற வரும்போது அதை அழுத்தினால் மருத்துவர் காணொலி மூலம் காட்சி மூலம் உங்களுக்கு ஆலோசனை வழங்குவார். தமிழகத்தில் இந்த திட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அனைத்து நாட்களிலும் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதன்படி கடந்த 13ம் தேதி தமிழகத்தில் மொத்தம் 5,461 பேர் ஆலோசனை பெற்றுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கேரளாவில் 5,053 பேரும், ஆந்திராவில் 3386 பேரும், ராஜஸ்தானில் 2883 பேரும் ஆலோசனை பெற்றுள்ளனர்.

Related Stories: