ட்வீட் கார்னர்: வோஸ்னியாக்கி 30

டென்மார்க் டென்னிஸ் நட்சத்திரம் கரோலின் வோஸ்னியாக்கி ஜூலை 11ம் தேதி தனது 30வது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடினார். முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான இவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பின்னர் அமெரிக்க நட்சத்திரம் செரீனா வில்லியம்சுடன் இணைந்து சில இரட்டையர் போட்டிகளில் களமிறங்கினார். ‘தற்போது கொரோனா அச்சுறுத்தலால் வீட்டில் முடங்கிக் கிடந்தாலும், 30வது பிறந்தநாளைக் கொண்டாடியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குடும்பத்தினருடன் பொழுதைக் கழித்து வருகிறேன். மகன் நிக்கோ வேகமாக வளர்கிறான்’ என்று ட்வீட் செய்துள்ளார். அவருக்கு மகளிர் டென்னிஸ் சங்கம், செரீனா உட்பட டென்னிஸ் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: