கொரோனாவுக்கு தடுப்பூசி 2020ல் சாத்தியமில்லை: நாடாளுமன்ற நிலைக்குழு தகவல்

ஒடெல்லி: கொரோனாவுக்கான தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது இந்தாண்டில் சாத்தியமில்லை என்று நாடாளுமன்ற நிலைக்குழு உறுதி படுத்தி உள்ளது. இந்தியாவில் ஆகஸ்ட் 15ம் தேதி கொரோனாவுக்கான தடுப்பூசி கோவாக்சின் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று ஐசிஎம்ஆர் கடந்த 3ம் தேதி அறிவித்து. இதற்கு பல்வேறு மருத்துவ நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கொரோனாவுக்கான தடுப்பூசி தேதியை அறிவித்துவிட்டு, ஆராய்ச்சியாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தும் போதிய அளவில் மனிதர்களிடம் சோதனை செய்யாமலும் அவசர கதியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக மத்திய அரசு மற்றும் ஐசிஎம்ஆர் மீது குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், நாடாளுமன்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிலைக்குழுவிடம் கொரோனா வைரஸ் தடுப்புக்கான கமிட்டி கூட்டம் அக்குழுவின் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தலைமையில் நடந்தது. அந்த கூட்டத்தில் மத்திய அரசின் முதன்மை ஆலோசகர் பேராசிரியர் கிருஷ்ணசாமி விஜயராகவன் மற்றும் அறிவியல் மற்றும் தொழிற்சாலை ஆராய்ச்சி கவுன்சில், அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறை, பயோடெக்னாலஜி துறையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றனர்.அப்போது, ஆய்வு முடிவுகளில் ரகசியம் காப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் ஆகஸ்ட் 15ம் என்று காலத்தை நிர்ணயித்து ஆராய்ச்சியாளர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கக் கூடாது.

கோவிட் 19  தடுப்பூசி கண்டுபிடிப்பதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு நம்பிக்கையை தந்துள்ளது. எனவே, தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தில் உள்ளது என்றார். இது குறித்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நாடாளுமன்ற நிலைக்குழு கூறுகையில்,  முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்ட கொரோனாவுக்கான தடுப்பூசி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பொதுபயன்பாட்டுக்கு வரும். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சாத்தியம் இல்லை என்று கூறியது.

Related Stories: