சென்னை: தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வந்த நிலையில், நேற்று சவரனுக்கு 136 குறைந்தது. தமிழகத்தில் கடந்த 2 மாதமாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. திடீரென வரலாற்று சாதனையும் நிகழ்த்தி வருகிறது. கடந்த 1ம்தேதி ஒரு சவரன் 37,472க்கும், 2ம் தேதி, 3ம் தேதி, 4ம் தேதி, 6ம்தேதிகளில் தங்கம் விலை மாறாமல் சவரன் 36,976 என்று விற்கப்பட்டது?. அதைத்தொடர்ந்து 7ம்தேதி சவரன் 37,008, 8ம் தேதி 37,536, 9ம் தேதி பவுன் 37,744க்கும் விற்கப்பட்டது. சவரன் 37,744 என்பது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற சாதனையை படைத்தது.