கொரோனா பரவல் அதிகரிப்பால் பருப்பு மில்கள் மூடல் விற்பனை தொடர் மந்தம்

விருதுநகர்:  கொரோனா வேகமெடுத்துள்ளதால் பருப்பு மில்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் விற்பனை மந்தமாக உள்ளது. விருதுநகரில் கொரோனா தொற்று பரவல் அனைத்து பகுதிகளிலும் அதிகரித்துள்ளது. பருப்பு மில்கள் அதிகம் உள்ள அல்லம்பட்டி, முத்துராமன்பட்டி, கட்டையாபுரம் பகுதிகள் தொற்று அதிகரிப்பால் ஆட்கள் வேலைக்கு வரவில்லை. இதனால் மில்கள் மூடப்பட்டு உற்பத்தி குறைந்துள்ளது. மேலும் தொடர் முடக்கம், வேலையின்றி வருமானம் குறைந்ததால் மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமல் வாங்கும் சக்தி குறைந்து வருகிறது. இதனால் விற்பனை குறைந்து, கடந்த வார விலை நிலவரத்திலேயே அனைத்து பொருட்களும் உள்ளன.

விருதுநகர் மார்க்கெட்டில் நேற்றைய விலை நிலவரம்: ஆந்திரா உளுந்து (100 கிலோ) - 8,300, தஞ்சை உளுந்து - 8,200, பர்மா உளுந்து  - 7,700, உருட்டு உளுந்தம்பருப்பு லயன் உளுந்து  - 11,000, தஞ்சை  - 11,000, உருட்டு உளுந்தம்பருப்பு பர்மா  - 10,000.  கர்நாடகாவிலிருந்து வரும் புதுபாசிப்பயறு மழையில் நனைந்த பருப்பாக இருப்பதால் சேதம் அதிகம் உள்ளது.

Related Stories: