ட்வீட் கார்னர்...ரியல் மாட்ரிட் உற்சாகம்

ஸ்பெயினில் நடைபெற்று வரும் லா லிகா கால்பந்து தொடரில், ரியல் மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் அலாவெஸ் அணியை வீழ்த்தியதை அடுத்து சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை பிரகாசமாக்கிக் கொண்டுள்ளது. அந்த அணியின் கரிம் பென்ஸிமா 11வது நிமிடத்திலும் (பெனால்டி கிக்), அசென்சியோ 50வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். லா லிகா தொடரில் பென்ஸிமா அடித்த 9 பெனால்டி வாய்ப்பிலும் கோல் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 35 லீக் ஆட்டங்களின் முடிவில் ரியல் மாட்ரிட் 80 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், பார்சிலோனா 76 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளன. ரியல் மாட்ரிட் இன்னும் 2 வெற்றி பெற்றால் சாம்பியன் பட்டம் உறுதியாகி விடும்.

Related Stories: