குடந்தை அருகே கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல் மூட்டைகள்: விவசாயிகள் கவலை

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள் பகுதியில் நுகர்பொருள் வாணிப கழக நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. பருத்திக்குடி விவசாயிகள் நெல்லை கொண்டு வந்து கொள்முதலுக்காக ஒரு வாரமாக காத்திருக்கின்றனர். ஆனால் இங்கு தனியார் வியாபாரிகள் கொண்டு வரும் ெநல்லுக்கு விவசாயிகள் பெயரில் ெகாள்முதல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இந்நிலையில் திருப்பனந்தாள் பகுதியில் ேநற்று மழை பெய்தது. தார்ப்பாய் கொண்டு மூடினாலும், நெல்லில் ஈரப்பதம் அதிகமாகி விட்டது.

தற்போது நெல்லை வெயிலில் காய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நெல் மூட்டைகளை பாதுகாக்க கூடுதல் தார்ப்பாய் வழங்க வேண்டும், வாரக்கணக்கில் காத்திருக்க வைக்காமல் உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: