இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் அடி வாங்கும் சீன செயலிகள்..: தடை செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக மைக் பாம்பியோ தகவல்!

வாஷிங்டன் : டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளிக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15,16ம் தேதிகளில் இந்திய, சீன ராணுவத்தினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். சீன தரப்பில் 45 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. எல்லை கட்டுப்பாடு கோடு தாண்டி இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவ முயன்றதாலேயே இந்த வன்முறை நிகழ்ந்ததாக மத்திய அரசு கூறி உள்ளது. இதன் காரணமாக லடாக் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதையடுத்து, உலகப் புகழ் பெற்ற டிக் டாக், ஹலோ, ஷேர் இட் உட்பட 59 சீன ஆப்களுக்கு மத்திய அரசு கடந்த மாதம் 29ம் தேதி அதிரடியாக தடை விதித்தது.

இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.  சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ், டிக் டாக் தடையால் அதன் தாய் நிறுவனமான பைட்-டான்ஸ்நிறுவனத்திற்கு ரூ.45,000 கோடி வருமானம் இழப்பீடு ஏற்படும் என தகவல் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், டிக்டாக் உள்ளிட்ட சீன சமூக ஊடக பயன்பாடுகளை தடை செய்வது குறித்து அமெரிக்கா ஆலோசித்து வருவதாக வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நான் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு முன்னாள் வெளியிட விரும்பவில்லை. ஆனால் நாங்கள் அதுகுறித்து ஆலோசித்து வருகிறோம், என கூறியுள்ளார். சீன செயலிகள் பயன்பாட்டில் இந்தியாவை அடுத்து இரண்டாவது இடத்தில் அமெரிக்கா உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: