70 சதவிகிதம் மக்களை கொரோனா தாக்கும்…

நன்றி குங்குமம் டாக்டர்

அதிர்ச்சி

உலகமெங்கும் கோரத் தாண்டவம் ஆடி வரும் கொரோனா, இந்தியாவில் தற்போது வேகமெடுத்து வருகிறது. கடந்த 4 மாதங்களில் மட்டும் 2.35 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். 34 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்படைந்து இருக்கின்றனர்.

இதற்கிடையே இந்த வைரஸ் இன்னும் எத்தனை காலம் தாக்குதல் நடத்தி, எவ்வளவு பேரை பாதிப்படையச் செய்யும் என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்துள்ளது.இதற்கான விடையை அமெரிக் காவின் University of Minnesota பல்கலைக்கழகத்தின் தொற்று நோய்த் துறை விஞ்ஞானிகள் அளித்துள்ளனர்.

உலகை அதிகளவில் பாதிக்கச் செய்த ஸ்பானிஷ் புளூ, சார்ஸ், மெர்ஸ், எபோலா, ஸ்வைன் ஃப்ளூ ஆகியவை தாக்குதல் நடத்திய காலகட்டங்களில் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டனர், எத்தனை பேர் உயிரிழந்தனர், அந்த வைரஸ்களின் வீரியம் எப்படி இருந்தது என்பதை ஒப்பீடு செய்து, அதன் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதன் அடிப்படையில், 780 கோடி கொண்ட உலக மக்கள் தொகையில் 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரையிலான (அதாவது 468 கோடி முதல் 545 கோடி வரை) மக்கள் கொரோனாவால் பாதிப்படைய வாய்ப்புள்ளது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். அதேநேரம் எவ்வளவு உயிர்களை கொரோனா காவு கொள்ளும் என்ற கணிப்பை அவர்கள் தெரிவிக்கவில்லை.எனவே, எச்சரிக்கை அவசியம்!

- க.கதிரவன்

Related Stories: