தென்தாமரைகுளம்: கரும்பாட்டூரில் சாலை மறியலில் ஈடுபட்ட ஆஸ்டின் எம்.எல்.ஏ. குண்டுகட்டாக கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்துக்குட்பட்ட கரும்பாட்டூர் ஆரம்பப்பள்ளி சாலை பல வருடங்களாக பழுதடைந்து காணப்பட்டது. ஆஸ்டின் எம்எல்ஏவிடம் அந்த சாலையை செப்பனிட்டு தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று ஆஸ்டின் எம்எல்ஏ, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை ஊராட்சி பொது நிதியிலிருந்து 15 லட்சம் ஏற்பாடு செய்தார். இந்த சாலையை சீரமைப்பதற்கான டெண்டர் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் விடப்பட்டது. இந்த பணியை 3 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஒப்பந்தம் வழங்கப்பட்டது.