தமிழகத்தில் மேலும் 1458 பேருக்கு கொரோனா; பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 19 பேர் உயிரிழப்பு: சுகாதாரத்துறை

சென்னை: தமிழகத்தில் மேலும் 1458 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 30,152-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,26,770-லிருந்து 2,36,657-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,348-லிருந்து 6,642-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,09,462-லிருந்து 1,14,073-ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இத்தாலியை விஞ்சி 6-வது இடத்துக்கு இந்தியா சென்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக 1458 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கூறியதாவது;

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 16,395 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 633 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 251-ஆக உயர்ந்துள்ளது.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 1,116 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 20,993 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 74 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 13,503 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை 5,76,695 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 0.83% ஆக உள்ளது.

* மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

* அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 54.37% ஆக உள்ளது.

* தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 16,022 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 1286 பேருக்கு தொற்று உறுதியானது.

* இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 18,689 ஆண்கள், 11,446 பெண்கள், 17 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்;

     ^ மகாராஷ்டிரா - 13

     ^ கர்நாடகா - 3

     ^ டெல்லி - 4

     ^ குஜராத் - 1

     ^ கேரளா - 3

     ^ பீகார் - 1

     ^ புதுச்சேரி - 1

     ^ ஆந்திரப்பிரதேசம் - 2

* வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்

     ^ சவுதி அரேபியா - 5

     ^ அரபு எமிரேட்ஸ் - 1

Related Stories: