கடந்த 24 மணி நேரத்தில் 2023 வாகனங்கள் பறிமுதல்; ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.10.44 கோடி அபராதம் வசூல்...தமிழக காவல்துறை தகவல்...!

சென்னை: இந்தியா உள்ளிட்ட 210 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 6-வது   இடத்தில் உள்ளது. இந்தியளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. இதற்கிடையே, கொரோனா பாதிப்பு குறைவாகவுள்ள இடங்களில் கடந்த 14-ம் தேதி கிழமை   முதல் பல்வேறு தளர்வுகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

தொடர்ந்து, 5-ம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு பல்வேறு  தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசியமின்றி  வெளியை சுற்றித்திரியும் பொதுமக்களுக்கு மீது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 5,89,794 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6917 பேர் கைது    செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஊரடங்கை மீறியதாக 4,50,479 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2023 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டடுள்ளது. இதுவரை, 5,48,842 வழக்குகளும், கடந்த 24 மணி நேரத்தில் 4276 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை ரூ.10.44 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வாகன உரிமையாளர்கள் தினசரி காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 30 நிமிடத்திற்கு ஒரு முறை 10 நபர்களுக்கு என்ற முறை கடைபிடிக்கப்பட்டு வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு    வருகிறது. கடந்த 24ம் தேதி முதல் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட வரிசை படி உரிமையாளர்களுக்கு வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. வாகனம் பெற வரும்போது எப்ஐஆர் நகல், ஓட்டுனர் உரிமம் அசல் மற்றும் நகல், வாகனத்தின்    ஆர்.சி.புத்தகம் அசல் மற்றும் நகல் கொண்டு வர வேண்டும் என்பது  குறிப்பிடத்தக்கது.

Related Stories: