வுகானில் பூஜ்யம்

பீஜிங்:  சீனாவின் ஹூபெய் மாகாணம் வுகான் நகரில்தான் கொரோனா வைரஸ் முதல் முறையாக பரவத் தொடங்கியது. இன்று உலகம் முழுவதும் கொரோனா கோர தாண்டவமாடி வரும் நிலையில், வுகான் நகரம் முழுமையாக விடுபட்டுள்ளது. அங்கு கடைசியாக எஞ்சியிருந்த 3 நோயாளிகளை நேற்று பரிசோதித்த போது, அவர்களுக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது. இதனால், 3 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன் மூலம், வுகானில் கொரோனா பாதிப்பு ஜீரோவாகி விட்டது. ஹூபெய் மாகாணத்தில் 68,135 பேர் பாதிக்கப்பட்டனர். இதில், 63,623 பேர் குணமடைந்தனர். 4,512 பேர் பலியாகினர். வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்ததும், வுகானில் வசிக்கும் ஒரு கோடி பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: