கணக்கீட்டை சொல்லி அரசு தப்பிக்க முடியாது மின் கட்டணத்தில் நடந்திருப்பது கொள்ளைதான்: கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கை: கொரோனாவுக்காக தள்ளி வைக்கப்பட்ட மின்கட்டண வசூலை கொரோனா தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் கட்டாயப்படுத்தி வசூலித்துக் கொண்டிருக்கிறது. கணக்கீட்டை காட்டி அரசு தப்பிக்க முடியாது. மின் கட்டணத்தில் நடந்திருப்பது கொள்ளைதான். சராசரியாக ஒரு நாளைக்கு 8 யூனிட் மின்சாரம் செலவழிக்கும் ஒரு குடும்பம் கூடுதலாக ஒரு நாளைக்கு 1/2 யூனிட் அதிகமாக செலவழித்தாலே அந்த குடும்பம் 1130 ரூபாய்க்கு பதிலாக 1846 ரூபாய் கட்டணம் செலுத்த  வேண்டி வரும்.

எனவே, குறைந்தபட்சம் தற்போதுள்ள வருமானமற்ற சூழ்நிலையை கவனத்தில் எடுத்து கொண்டு, 2 மாதத்திற்கு ஒருமுறை  500 யூனிட்டுக்கு அதிகமாக பயன்படுத்தினாலும், 500 யூனிட்டுக்கு கீழே என்ன கட்டண விகிதம் கணக்கிடப்பட்டதோ அதே கட்டண விகிதத்தையே 500 யூனிட்டுக்கு மேலே பயன்படுத்துவோருக்கும் கணக்கிடப்பட வேண்டும். கொரோனா நெருக்கடிகள் தீரும் வரை இத்தகைய கணக்கீட்டு முறையையே செயல்படுத்த வேண்டும்.

Related Stories: