செங்கல்பட்டு அருகே ஒழலூர் கிராமத்தில் 8.75 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்: எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் திறந்தார்

செங்கல்பட்டு: ஒழலூர் கிராமத்தில், 8.75 லட்சத்தில், புதிதாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் திறந்து வைத்தார்.செங்கல்பட்டு திமுக எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனனின், தொகுதி மேம்பாட்டு நிதி 8.75 லட்சத்தில், ஒழலூர் கிராமத்தில் புதிதாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.காட்டாங்கொளத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் எம்.கே.தண்டபாணி தலைமை வகித்தார். ஒழலூர் ஊராட்சி திமுக செயலாளர் ஒ.ஈ.ஈஸ்வரி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு திமுக எம்எல்ஏ. வரலட்சுமி மதுசூதனன் கலந்துகொண்டு, புதிய சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்து, பெண்களுக்கு குடங்களில் குடிநீர் வினியோகம் செய்தார்.

நீண்டநாளாக தண்ணீர் கிடைக்காமல் தவித்த மக்களுக்கு, தேவையை உணர்ந்து நிறைவேற்றிய எம்எல்ஏவுக்கு கிராம பெண்கள் பாராட்டு தெரிவித்தனர்.மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக், குன்றத்தூர் ஒன்றிய தொழில்நுட்ப அணி அமைப்பாளர் இ.சிலம்புசெல்வன்,  திமுக நிர்வாகிகள் டேவிட், சீனுவாசன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: