இயற்கையை பாதுகாத்தால் மட்டுமே மனிதகுலத்தை காப்பாற்ற முடியும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: உலக சுற்றுச்சூழல் நாள் கொண்டாடப்படும் நிலையில், இயற்கை மீது கடந்த காலங்களில் நாம் நடத்தியத் தாக்குதல்கள் இப்போது நம்மை எவ்வாறு திருப்பித் தாக்கத் தொடங்கியுள்ளன என்பதை அண்மைக்காலமாக நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் தெளிவாக உணர்த்துகின்றன. இனியாவது இயற்கையை நாம் மதிக்காவிட்டால் மனிதகுலத்தை காப்பாற்ற முடியாது என்பதை உணர வேண்டும். புவிவெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியசுக்குள் குறைக்காவிட்டால் அடுத்த சில பத்தாண்டுகளில் பேரழிவுகள் அதிகரிக்கும்.

அது மனிதகுல அழிவுக்கு வழி வகுக்கும். அதைத் தடுக்க வேண்டுமானால் இயற்கையையும், அதன் மூலமாக சுற்றுச்சூழலையும் நாம் பாதுகாக்க வேண்டும்.  புவிவெப்பமயமாதலை கட்டுப்படுத்த வேண்டிய கடமையுள்ள மத்திய, மாநில அரசுகளும் நிலக்கரி உள்ளிட்ட படிம எரிபொருட்களின் பயன்பாட்டை குறைப்பது உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். சுற்றுச்சூழலை பாதுக்காப்பது அரசின் கடமை என்று மக்கள் ஒதுங்கி இருக்காமல் அனைவரும் ஒன்று பட்டு இயற்கையையும் சுற்றுச்சூழலையும் காக்க உழைக்க வேண்டும்.

Related Stories: