உலக புகையிலை ஒழிப்பு தினம்

காஞ்சிபுரம்: மே மாதம் 31ம் தேதி  புகையிலை ஒழிப்பு தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் புகையிலை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவின்பேரில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் பழனி ஆலோசனைப்படி காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, திருப்புட்குழி, பரந்தூர், ஐயன்பேட்டை, வாலாஜாபாத், அவலூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் புகையிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விளம்பர பதாகைகள் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் நேர்முக உதவியாளர் இளங்கோவன் தலைமையில் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுகாதார துறை அலுவலர்கள் விஸ்வநாதன், பசுபதி, சிவசண்முகம், சோழவந்தான் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: