சில்லி பாயிண்ட்...

* போட்டிகளுக்கான கட்டணத்தில் வரிச்சலுகை அளிப்பது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இடையே மோதல் வலுத்து வருகிறது.

*ரசிகர்களால் நிரம்பி வழியும் ஸ்டேடியங்களில் உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் விளையாடும் அந்த அனுபவம் தனித்துவமானது. ரசிகர்களின் ஆரவார கூக்குரல் இல்லாமல் பேட் செய்ய வேண்டும் என்று நினைத்துப் பார்க்கவே கடினமாக உள்ளது என்று இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவான் கூறியுள்ளார்.

* பந்தை பளபளப்பாக்குவதற்கு எச்சிலை உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது ஒரு இடைக்கால நடவடிக்கை தான். வைரஸ் தொற்று அபாயம் நீங்கி இயல்பு நிலை திரும்பியதும் மீண்டும் தீவிர ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுப்போம் என்று ஐசிசி ஆலோசனைக் குழு தலைவர் அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.

* பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னாள் தொடக்க வீரர் தவுபீக் உமருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில், கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது.

* ஐபிஎல் டி20 தொடரை நடத்த அனுமதிப்பது குறித்து இந்திய அரசு தான் முடிவு செய்யும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.

* குத்துச்சண்டை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு முதல் முறையாக கொரோனா காப்பீட்டுத் திட்டம் அறிமுகமாகி உள்ளது.

* டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்க தேர்தல் ஜூன் மாதத்திற்குப் பிறகு நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: