தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: பலி எண்ணிக்கை 3-ஆக உயர்வு...சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்

சென்னை: தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2902 ஆக உயர்ந்து உள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் உலகளவில பலி எண்ணிக்கை 59,000ஐ தாண்டிய நிலையில், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்சமயம் உலகளவில் சுமார் 200  நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உயிரிழப்புகளும் பாதிப்புகளும் நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த வைரஸ் தமிழகத்திலும் கொடூர வேகத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது;

* இன்று புதிதாக கொரோனா பாதித்த 74 பேரில் 73 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்.

* இன்று வீட்டுக் கண்காணிப்பில் 90,541 பேர் உள்ளதாக தெரிவித்தார்.

* டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் இதுவரை 422 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* 407 பேரின் ரத்த மாதிரி பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.

* 4,248 பேரின் ரத்த மாதிரிகள் சோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

* இதுவரை சோதனை செய்யப்பட்டதில் 3,356 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை.

* கொரோனா பாதிப்பு பற்றி பதற்றம் அடைய தேவையில்லை.

* தமிழகம் முழுவதும் 29 லட்சம் பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

* 7,23,491 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

பலி எண்ணிக்கை 3- ஆக உயர்வு

கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 53 வயது பெண் உயிரிழந்துள்ளார். இன்று ஒரே நாளில் 2 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. இவர் மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: