பெண்கள் டி20 உலக கோப்பை பார்த்தவர்களால் சாதனை

ஆஸ்திரேலியாவில் பிப்.21 முதல் மார்ச் 8ம் தேதி வரை ஐசிசி பெண்கள் டி20 உலக கோப்பை போட்டி நடந்தது. அந்தப் போட்டியை 1.1பில்லியன் அதாவது 110கோடி  பேர் பார்த்து ரசித்துள்ளனர்.   இதுவரை முதலிடத்தில் இருந்த 2018ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசில் நடந்த பெண்கள் டி20 உலக கோப்பை போட்டியை விட இந்த போட்டியை 20 மடங்கு அதிகம் பேர் போட்டியை பார்த்து ரசித்தார்களாம்.    இந்த எண்ணிக்கையை எட்டியதின் மூலம் ஐசிசி நடத்திய போட்டிகளில் அதிகம் பேர் ரசித்த 2வது போட்டி என்ற சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது. முதல் இடத்தில் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஆண்கள் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி  உள்ளது.

  மெல்போர்ன் நகரில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான இறுதிப் போட்டியை  நேரடியாக 86,174பேர் பார்த்து ரசித்தனர். இந்தியாவில் தொலைகாட்சி மூலம் 90லட்சம் பேர் பார்த்துள்ளதும்  சாதனையாகும். இது முந்தைய பெண்கள் டி20 உலக கோப்பை போட்டிகளை விட இந்த எண்ணிக்கை பலமடங்கு அதிகம்.

Related Stories: