கொரோனா பற்றிய அச்சம் வேண்டாம் மக்கள் பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவருகிறது தினகரன்

வேலூர்: உலகின் இயக்கத்தை தடுமாற வைத்திருக்கும் ஒரு வார்த்தை ‘கொரோனா’. இதனால் மக்களின் உடல் நலன் சார்ந்த பாதுகாப்பை அனைவருமே உணர வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளும் அதையே யோசித்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதேநேரத்தில் நாளிதழ்களை தொட்டு படிப்பதால் கிருமி தொற்று வந்துவிடுமோ? என்ற பயம் எழுவது இயற்கைதான். ஆனால், அதற்கு இடமே கொடுக்காமல், முழு அளவிலான பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றி நமது தினகரன் நாளிதழ் அச்சாகி, உங்கள் கரங்களில் தவழவிடுவதில் நாங்கள் சமரசம் எதையும் கொள்வதில்லை.அதிநவீன அச்சு இயந்திரம் மூலம் அச்சாகி வரும் தினகரன் நாளிதழ் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரதியிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, நவீன முறையில் கைகளை கிருமி நாசினியால் சுத்தம் செய்து கொண்ட ஊழியர்களால் பார்சல் செய்யப்பட்டு, லேபிளிங் செய்யப்பட்டு அதன் கட்டுகள் மீதும் கிருமி நாசினி தௌிக்கப்பட்டு வாசகர்களுக்காக வெளியில் அனுப்பி வைக்கப்படுகிறது.

அதேபோல் தினகரன் நாளிதழை, அதன் பதிப்பு அலுவலகத்தில் இருந்து வாசகர்களுக்காக சுமந்து செல்லும் வாகனங்கள், வாகன ஓட்டிகள் ஆகியோருக்கும் முழுமையான பாதுகாப்பு அம்சங்கள் கையாளப்படுகிறது. மேலும் நாளிதழை கொண்டு வருபவர்களும், தங்களிடம் சேர்ப்பிக்கும் பணியில் உள்ள தொழிலாளர்களும் கூட தங்கள் கரங்களை கிருமி நாசினியால் சுத்தம் செய்து கொண்ட பின்னரே வினியோக பணியில் ஈடுபடுகின்றனர்.இதன் மூலம் தினகரன் நாளிதழின் வாசகர்கள் எங்களுக்கு அதிமுக்கியம் என்பதை உறுதியுடன் நம்புகிறோம். அந்த உறுதியுடன், அனைத்துவித பாதுகாப்பு அம்சங்களை கையாண்டு உங்களை வந்து சேரும் தினகரன் நாளிதழின் ஒவ்வொரு பக்கத்தையும் நம்பிக்கை என்ற வாசத்துடன் வாசகர்கள் வாசிப்பார்கள் என்ற உறுதியான நம்பிக்கை எங்களுக்கு என்றுமே உண்டு என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Related Stories: