டெல்லியில் மதவழிபாட்டு கூட்டத்தில் பங்கேற்ற 2,137 பேரின் அடையாளம் தெரிந்தது.. தமிழகத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் என பகீர் தகவல்

டெல்லி : டெல்லி மாநாட்டில் பங்கேற்ற முக்கிய நிர்வாகிகள் பல்வேறு மாநிலங்களுக்கும் பயணத்திருப்பதால் நாடு முழுவதும் கொரோனா பீதி உச்சத்தை எட்டியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1507 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் டெல்லியில் மார்ச் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை தப்லீகீ- ஜமாத் என்ற அமைப்பினர் ஒரு வழிபாட்டு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தெரியவந்தது. இதுமட்டுமல்லாது சவுதி, இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்த கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் மாநாட்டில் பங்கேற்று விட்டு, தெலங்கானா, தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு திரும்பியவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதையடுத்து டெல்லி மாநாட்டில் பங்கேற்று சொந்த ஊர்களுக்கு திரும்பிய அனைவரையும் கண்டுபிடிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் 515 பேர் உட்பட நாடு முழுவதும் 2,137 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களையும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டுபிடித்து தனிமைப்படுத்தும் பணிகளை மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. இந்தநிலையில், தபிலீகி ஜமாத்தின் மவுலானா மீது தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அஸ்ஸாமிலிருந்து 216 பேரும், உத்தரப்பிரதேசத்திலிருந்து 156 பேரும், மகாராஷ்டிராவிலிருந்து 109 பேரும், மத்திய பிரதேசத்திலிருந்து 107 பேரும் கலந்து கொண்டனர். அது மட்டுமல்லாமல் பீகாரில் இருந்து 86 பேரும், தெலுங்கானாவிலிருந்து 55 பேரும், ஜார்க்கண்டிலிருந்து 46 பேரும், கர்நாடகாவிலிருந்து 45 பேரும், உத்தரகண்ட்டிலிருந்து 34 பேரும், அந்தமானிலிருந்து 21 பேரும், ராஜஸ்தானிலிருந்து 19 பேரும், இமாச்சல பிரதேசம், கேரளா, ஒடிஸாவிலிருந்து தலா 15 பேரும், பஞ்சாபிலிருந்து 9 பேரும், மேகாலயாவிலிருந்து 5 பேரும் கலந்து கொண்டுள்ளனர்.

Related Stories: