கொரோனா தடுப்பு பணிகளுக்கு சிட்டி யூனியன் வங்கி 2 கோடி நிவாரண நிதி

சென்னை: சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி நா.காமகோடி வெளியிட்ட அறிக்கை: கொரோனா வைரசை போக்க, நமது மத்திய அரசும் அந்தந்த மாநில அரசுகளும் போர்க்கால அடிப்படையில் சுகாதார நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  இந்த இக்கட்டான தருணத்தில், அரசு முழு வீச்சில் செய்து வரும் கொரோனா தடுப்பு பணிகளுக்கு கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் சிட்டி யூனியன் வங்கி,  பிரதமரின் நிவாரண நிதிக்கு 1 கோடி வழங்கியுள்ளது.

மேலும் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி வழங்கி, இந்த பெரும் பணியில் சிட்டி யூனியன் வங்கி தன்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. வழங்கப்பட்ட மொத்த நிதியான 2 கோடியில் சிட்டி யூனியன் வங்கியும், வங்கி இயக்குநர்கள், நிர்வாகிகள், ஊழியர்கள் அனைவரும் இணைந்து 2 கோடி வழங்கியுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: