தமிழகத்தில் 100-ஐ கடந்தது கொரோனா பாதிப்பு: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124-ஆக அதிகரிப்பு....பீலா ராஜேஷ்

சென்னை: தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124-ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் இருந்து வந்தவர்கள் 45 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருவது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்தியாவில் 27 மாநிலங்களில் கொரோனா பரவியுள்ளது.

கடந்த 3 நாட்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரத்தின்படி, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1041 ஆக அதிகரித்துள்ளது. 102 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து குணம் அடைந்து இருப்பதாகவும்,  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124-ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது;

* டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற 1,131 பேரில் 515 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

* பிப். 15-ம் தேதியிலிருந்து நடைபெற்ற கூட்டங்களை காவல்துறை மூலம் காவல்துறை மூலம் தகவல் சேகரித்து வருகிறோம். டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து தெரிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

* டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துள்ளனர். உளவுத் துறை மூலமாக கணக்கெடுப்பு எடுத்து வருகிறோம்.

* இன்று கொரோனா பாதிக்கப்பட்ட 57 பேரில் 50 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் கலந்துக்கொண்டவர்கள்.

* டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட தமிழர்கள் 1,131.

* அரியலூரில் அனுமதிக்கப்பட்டுள்ள இளம்பெண் வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் வேலை பார்த்தவர்

*  டெல்லி மாநாட்டில் பங்கேற்று பாதிக்கப்பட்டோரின் விவரம்;

        # திருநெல்வேலி- 22

        # தூத்துக்குடி- 1

        # கன்னியாகுமாரி- 4

        # நாமக்கல்- 18  

* மாநாட்டில் பங்கேற்காமல் பாதிக்கப்பட்டோரின் விவரம்

        # சென்னை- 4

       # கன்னியாகுமரி- 1( விமான நிலையத்தில் வேலை பார்த்தவர்)

Related Stories: