மாவோ சூட்

நன்றி குங்குமம் முத்தாரம்

* பிரான்ஸ் மற்ற நாடுகளைவிட அதிகளவில் ஸ்காட்ச்  மதுவினை கொள்முதல் செய்கிறது.

 

* இந்தியாவில் குஜராத்தில் மட்டுமே இயற்கை வாழிடத்தில் சிங்கங்கள் உள்ளன.

 

* நவீன ஸ்மார்ட்போன்களில் உள்ள கணினி சக்தி, நாசா நிலவுக்கு மனிதனை அனுப்பும்போது பயன்படுத்திய இரு பழங்கால கணினிகளின் சக்தியைவிட அதிகம்.

* பிரபல ஓவியர் மக்பூல் ஃபிதா ஹுசேன் என்ற எம்.எஃப். ஹுசேனின் தாயார் ஸய்னாப், அவர் 18 மாதக் குழந்தையாக இருக்கும்போதே இறந்துவிட்டார். தனது தாயாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், எம்.எஃப்.ஹுசேன் அன்னை தெரசா உட்பட எந்தப் பெண்ணின் உருவத்தை வரைந்தாலும் அதற்கு முகம் இல்லாமல் வரைந்தார்.

* 1954இல் முதன்முறையாக இந்தியாவில் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டபோது டாக்டர் ராதாகிருஷ்ணன், ராஜாஜி மற்றும் சர். சி.வி.ராமன் ஆகிய மூவருக்கும் அது வழங்கப்பட்டது.

* உலகம் முழுவதும் இலவசமாக அழைக்கப் பயன்படுத்தப்படும் தொலைபேசி எண்களின் பட்டியலில் 800 என்ற எண் அவசியம் இடம் பெற்றிருக்கும். முதன்முதலில் அமெரிக்காவில் இலவச அழைப்பு அறிமுகமானபோது அந்தப் பகுதியின் கோட் (code) எண்ணாக 800 இருந்தது.

* இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள சியாச்சின் பனிமலையில் உள்ள பாயின்ட் சோனம் என்ற இடத்தில் ஹெலிகாப்டர் தளம் கடல் மட்டத்திலிருந்து 6,400 மீட்டர்  உயரத்தில் உள்ளது.

 

* அமெரிக்காவில் நார் மாமெக்கார்வே என்பவர், பெண்கள் கருச்சிதைவு செய்துகொள்ளும் உரிமைக்கு எதிரான டெக்சாஸ் மாகாண சட்டம் ஒன்றை எதிர்த்து ரோ என்ற புனைபெயரில் நீதிமன்றத்தில் வாதிட்டார். நீதிமன்றம் அந்தப் பெண்ணுக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது. ரோ-வேட் தீர்ப்பு என அழைக்கப்படும் இந்தத் தீர்ப்பு, பெண்களுக்கான தன்னிலை உரிமையை நிலைநாட்டியது.

* பாரிஸிலிலுள்ள ஈஃபிள் கோபுரம் 1889ல் பாரிஸில் நடந்த The Exposition Universelle என்ற கண்காட்சிக்காக கட்டப்பட்டது. இந்தக் கண்காட்சியில் இருந்த இரும்புத் தூண்கள், பிறகு மும்பை தாஜ்மஹால் ஹோட்டலின் நடனமாடும் கூடத்தில் நிறுவப்பட்டன.

* சீனப் புரட்சித் தலைவர் மாசேதுங் அணிந்த சூட் உலகம் முழுவதும் மாவோ சூட் என அழைக்கப்படுகிறது. ஆனால் கம்யூனிஸ்ட் சீனாவில் அனைத்து இடங்களிலும் காணப்படும் இதை ஜோங்ஷான் (Zhongshan) என அழைக்கிறார்கள். இது மாசேதுங் பிறந்த இடமாகும்.

தொகுப்பு: க.ரவீந்திரன்

Related Stories: